Thursday 20 March 2014

பொது அறிவு 1

1.கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2.
புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3.
ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4.
ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5.
மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6.
நாளமில்லா சுரப்பிகள் என்பவை?
நாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன
7.
ஹெபேரின் என்பது?
ரத்தம் உறைதலை தடுப்பது
8.
எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்?
9;3;3;1
9.
உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்?
டிசம்பர் 1-ம் தேதி
10.
தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது?
சுதேசமித்திரன்
11.
தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக?
..சிதம்பரனார்
12.
தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2006
13.
முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
14. 2006
ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு?
ஜெர்மனி
15.
பொருத்துக
..சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி. - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
16.
தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்?
ஸ்ரீபெரும்புதூர்
17.
தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது?
கலைமாமணி விருது
18.
இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
எச்..கிருஷ்ண பிள்ளை
19.
நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று?
காவடி ஆட்டம்
20.
கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்
21.
இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு
22.
மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்
23.
பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்
24.
சாங்கியம் என்பதன் பொருள் எண்
25.
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி
26.
மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்
27.
தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்
28.
ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்
29.
அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்
30.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
31.
நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
32.
சமீபத்தில் சரத்து 356 பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
பீகார்
33.
எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்? 1944
34.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
குழந்தை இறப்பு விகிதம்
35.
அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது? பற்றாக்குறைவான உற்பத்தி திறனால்
36.
இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? லக்கடா வாலா கமிட்டி
37.
தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு? 62.4 மில்லியன்
38.
ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு? 75 சதவீதம்
39.
ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும் போது அதன் இயக்க ஆற்றல்? நான்கு மடங்காகும்
40.
ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும் போது அதன் வேக வளர்ச்சி? பூஜ்ஜியம்
41.
டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர்? மைக்கேல் ஃபாரடே
42.
பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை? குறையும்
43.
டி.என். என்பது எதனால் உண்டாக்கப்பட்டது? நியூக்ளியோடைடுகள்
44.
பொருத்துக
அம்மோனியம் சல்பேட் - உரம்
குளோரோபாரம் - மயக்க மருந்து
கார்பன் - ஒடுக்கி
ஹைட்ரஜன் பெராக்ஸைடு - நிறம் நீக்கி
45.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது? யுரேனியம் யு-235
46.
மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது? யூக்கலிப்டஸ்
47.
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது?ரஷ்யா
48.
தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடம் நெய்வேலி
49.
எந்த ஒன்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையாகும்? விந்துக்குழாய் அகற்றல்
50.
ராவ்-மன்மோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? 1991
51.
குஜராத்தில் புவி அதிர்ச்சி ஏற்பட்ட நாள்? ஜனவரி 25, 2001
52.
பொகாரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் ஜார்கண்ட்
53.
நீலகிரி மலை ஒரு பகுதியாக அமைந்துள்ள தொடர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
54.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜவுளிச் சந்தை ஈரோடு
55.
மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி
56.
ஒரிசா கடற்கரை பெரும்புயலால் தாக்கப்பட்ட நாள் மற்றும் நாட்கள் 29 அக்டோபர், 1999
57.
கடலினடியில் ஏற்படும் நில நடுக்கத்தால் உருவாகும் நீண்ட, இராட்சத பேரழிவு அலைகள் கடற்கோள்களாகும்.
58.
மெய்கீர்த்தி என்பது கல்வெட்டின் வரலாற்று முகவுரை
59.
சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் காம்டே
60.
யாருடைய ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை? பல்லவர்
61.
ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டும் அல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினர்? குடும்ப அமைப்பு
62.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர் ஜவஹர்லால் நேரு
63.
லோக்சபாவிற்கு, யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது நேரடி தேர்தலினால்
64.
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்? நேரு
65.
அரசுக்கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது? அயர்லாந்து
66.
ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர் பிரதம அமைச்சரால் மற்றும் காபினெட்டின் ஒப்புதலோடு
67.
இரட்டைப் பதிவு கணக்குப் பதிவியல் முறையினைக் கண்டுபிடித்தவர் லூக்கா பேசியாலா
68.
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை ஆனது கிளை வங்கி முறை
69. 2008-2009
நிதி ஆண்டிற்கு வருமான வரி விதி விலக்குக்கு உட்பட்ட வருமான அளவு ரூ.1,50,000
70.
மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன? இறக்குமதி-ஏற்றுமதி வணிகம்
71.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1969
72.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930ம் ஆண்டுடன் தொடர்புடையது சட்ட மறுப்பு இயக்கம்
73.
பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை எழுதியவர் கல்கி
74.
சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய
75.
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக் கிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் சி. ராஜகோபாலாச்சாரி
76.
தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊர் எட்டயபுரம்
77.
செயப்பாட்டு வினை .கா கந்தன் யாரால் அழைக்கப்பட்டான்?
78.
முயன்றால் முடியாதது எது? எவ்வகை வாக்கியம் வினா வாக்கியம்
79.
அந்தோ! சித்த வைத்திய முறை அழியத் தொடங்கி விட்டதே!- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. உணர்ச்சி வாக்கியம்
80.
கம்பரை புரந்த வள்ளல் சடையப்ப வள்ளல்
81.
உமறுப்புலவர் இயற்றிய நூல் சீறாப்புராணம்
82.
இலக்கணக்குறிப்பு தருக அவியுணவு- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
83.
செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது? புரோட்டீன் உருவாக்குதல்
84.
கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் மைட்டோகாண்டிரியா
85.
லைசோசோமின் வேறுபெயர் தற்கொலைப் பைகள்
86.
பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை மியோஸிஸ்
87.
விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர் பாசோரியல் தகவமைப்பு
88.
டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்? ஒலியின் அளவு
89.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது? குளுக்கஹான்
90.
செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
91.
முதன் முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் பாபர்
92.
கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது? வட இந்தியா
93.
சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மாவின் வகைகள் மூன்று
94.
தத்துவ தரிசனம் என்ற சொல்லின் பொருள் உண்மையான உட்பார்வை
95.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம் சிவகங்கை
96.
பகவத் கீதையில் உள்ள அதிகாரங்கள் 18
97.
தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள் அக்டோபர்-நவம்பர்
98.
ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் இமய மலைத்தொடர்கள்
99.
தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு? கோதாவரி
100.
சதுப்புநிலக்காடுகள் காணப்படுவது கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகளில்




பொது-அறிவு-வினா-விடைகள். 

No comments:

Post a Comment