Monday 24 August 2015

வியாபம் ஊழல்


                                                                                                               

           
பலகோடி ரூபாய் பண முறைகேடுகள், 49 பேரின் மர்ம மரணங்கள் என்று நீளும் வியாபம் முறைகேடு, உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடும் நிலைக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருப்பதால், அம்மாநில முதல்வருக்கும், அக்கட்சிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
அமலாக்கப் பிரிவால் தேடப்பட்டுவரும் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பலத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானபோதும், பாஜக  தலைமை அதற்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இறங்கவில்லை. அதேபோல மகாராஷ்ட்ரா அமைச்சர் பங்கஜா முண்டே மீது 100 கோடி ரூபாய் ஊழல் புகார் கூறப்பட்ட விவகாரத்திலும் பாஜக தலையிடவில்லை. அதனால் ம.பி. விவகாரத்திலும் பாஜக மௌனம் சாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரங்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவதாக இல்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கடும் நெருக்கடிகளை கொடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் தொழில் முறை தேர்வு வாரியமான 'வியாபம்' எப்படி ஊழல் முறைகேடுகளின் கேந்திரமாக மாறியது, 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் பயணம் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'வியாபம்'  ஊழலில் 4 நூதனமான முறைகள் கையாளப்பட்டுள்ளன. தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் தகுதித் தேர்வு நடத்துவதுதான் 'வியாபம்' நிறுவனத்தின் பிரதான பணியாகும். இந்நிலையில், தகுதித் தேர்வை எழுத விரும்பாதவர்கள் லஞ்சம் கொடுத்து கல்லூரிகளில் அல்லது அரசு வேலைகளில் சேர்ந்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3ல்  2 பேர் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் ஆவர். 70 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் ஆவர். இதுதவிர இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் மற்றும் சாட்சிகள் 49 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.  ஊழல் முறைகேட்டில் ஆயிரக்கணக்கில் கைதுகள், 49 பேர் மரணம், ஆளுநர், முதல்வர் என்று உச்ச பட்ச அதிகாரங்கள் ஈடுபட்டிருப்பது இதுவே முதன்முறை என்பதால், இவ்விவகாரத்தில் ஊடகங்களின் கவனமும் குவிந்திருக்கிறது.
இந்த மோசடி, தொழில்நுட்பம் மூலம் நடைபெறவில்லை. மாறாக 4 நூதன முறைகளில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 'வியாபம்' தேர்வை எழுதாமலேயே கல்லூரியிலோ அல்லது அரசு வேலையிலோ சேர விரும்புகிறவர்களை இடைத்தரகர்கள் அடையாளம் கண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படத்துக்கு பதில் திறமையான ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து அவரது புகைப்படத்தை ஒட்டி ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுத அனுமதித்துள்ளனர்.
நுழைவுச்சீட்டில் உள்ள பெயருக்கும், புகைப்படத்துக்கும் உள்ள முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு தேர்வுக்கூட கண்காணிப்பாளருக்கு லஞ்சம் கொடுத்து ஈடுகட்டியுள்ளனர். தேர்வு முடிவு வெளியானதும், தேர்வு எழுதியவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு, உண்மையான விண்ணப்பதாரரின் புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளனர்.
அடுத்து, திறமையான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று கடைசி நேரத்தில் கல்லூரியில் சேராமல் போனது போல் மோசடி செய்துள்ளனர். அந்த இடங்களை வேறு மாணவர்களுக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் இடங்களை ஒதுக்கியுள்ளனர்.
மூன்றாவதாக, விண்ணப்பதாரர் சார்பாக தேர்வெழுத திறமையானவர்கள் கிடைக்காத பட்சத்தில், தேர்வு அறையில் திறமையானவர்களுக்கு பின்னால் லஞ்சம் கொடுத்தவர்களை அமர வைத்து ‘காப்பி’ அடிக்க அனுமதித்துள்ளனர்.
நான்காவதாக, திறமையானவர்கள் கிடைக்காதபட்சத்தில் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்து விட்டு, கணினியில் சாப்ட்வேர் உதவியுடன் மதிப்பெண்ணை திருத்தி சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்த முறைகளில் மிக எளிதாக சட்ட மீறல் நடந்துள்ளது மிகப்பெரிய அளவிற்கு ம.பி. அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலம் கையகபடுத்தும் மசோதா

 நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.

 இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

 இந்த அவசர சட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருவதாககும் கூறப்பட்டது.

 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

 நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம், ஏழை விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்றும், தொழில் அதிபர்களுக்கு ஆதரவானது என்றும் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.

 மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் சட்ட திருத்தத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன என்று பார்க்கலாம்.

 ஏற்கனவே உள்ள சட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் போது சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், அதற்கு நிலம் உரிமையாளர்களிடம் 80 சதவீத முன் அனுமதி கேட்க தேவை இல்லை என்று சட்டத்தின் 10(ஏ) என்ற விதி கூறுகிறது. இதில் இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 அதாவது, 5 பிரிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, நிலத்தின் உரிமையாளரின் 80 சதவீத அனுமதி பெறத் தேவை இல்லை.

 அவை –

 1. தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

 2.ராணுவம் தொடர்பானவை.

3. மின்சார திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.

 4. தொழில் பூங்காக்கள்.(இனடஸ்டிரியல் காரிடார்ஸ்)

 5. ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் (தனியார்–அரசு, பங்களிப்புடன் கூடிய திட்டங்களான இவற்றில் நிலத்தின் உரிமை மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும்)

 நிலத்தை கயகப்படுத்தும் போது அந்த நிலம் விவசாம் செய்வதற்கு உரிய நிலமா என்பது கவனிக்க்ப்படவேன்டும் என்று முன்பு இருந்த சட்டட்த்தில் கூறப்பட்டு இருந்தது.

 ஆனால் இப்போது கொ0ண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தில், மேற்கண்ட 5 அமைப்புகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதை பார்க்கத் தேவை இல்லை.

 அதாவது, மேற்கு வங்காளத்தில் சிங்ரூர் என்ற இடத்தில் விவசாய நிலம் கையகப்படுத்தியம்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், புதிய சட்ட திருத்தத்தில், நிலத்தை கையகப்படுத்தும்போது அது விவசாயம் செய்யும் நிலமா அல்லது புறம்ப்போக்கா என்பதை பார்க்கத் தேவை இல்லை. அதாவது செழிப்பான விவசாய நிலத்தைக்,கூட கையகப்படுத்த முடியும்.

 கடந்த காலத்தில் உள்ள சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்தும்போது, அதனால் யார், யார் பாதிக்கப்படுவார்கள் என்று பார்த்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதாவது நிலத்தின் உரிமையாளர் தவிர அங்கு பணிபுரியும் விவசாயிக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

 ஆனால், புதிய சட்ட திருத்தத்தின்படி, நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.

 கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி. நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்க்ப்பட்டவர்களுக்கு, இழப்பீடு, புணரமைப்பு மற்றும் மறு குடியேற்றம் தொடர்பாக ஒரே மாதிரியான திட்டம் இல்லை.

 ஆனால், அவசர சட்டம் மூலம், கீழ்க்கண்ட 13 சட்ட பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டு, அவற்றும் இழப்பீடு, புணரமைப்பு, மறுகுடியேற்றம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்லது.

 அவை வருமாறு:–

 1.நிலக்கரி வளம் உள்ள பகுதிகள் கையகப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி சட்டம் 1957.

 2. தேசிய சாலை சட்டம் 1956.

3. நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கம்) சட்டம் 1885.

4. அணுசக்தி சட்டம் 1962.

 5. இந்திய டிராம்வே சட்டம் 1886.

6. ரெயிவே சட்டம் 1989.

7. பழங்கால நினைவகங்கள், தொல்பொருள் ஆய்வு சட்டம் 1958.

8.பெட்ரோலியம், கனிமவள பைப்லைன் சட்டம் 1962.

9.தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேசன் சட்டம் 1948.

10.மின்சார சட்டம் 2003.

11. அசையா சொத்து கேட்பு மற்ரும் கைப்பற்றுதல் சட்டம் 1952.

12. நிலம் கையகப்படுத்துவதால் இடம் பெயர்ந்தோர்களுக்கான மறுகுடியேற்றம் சட்டம் 1948.

 13. மெட்ரோ ரெயில்வே கட்டுமான வேலை சட்டம் 1978.

 மேற்கண்டவகைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் போதும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு, புணரமைப்பு, மறுகுடியேற்ற சலிகைகள் கிடைக்கும்.

 நிலம் கையகப்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு, நகர்ப்புர நிலம் என்றால், மார்க்கெட் விலையில் 4 மடங்கும், ஊரகபகுதி நிலம் என்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மார்க்கெட் விலையில் இரன்டு மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முந்தைய சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

 இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் விடப்பட்டன. ஆனால் புதிய சட்டதிருத்தத்திலும் இதே அளவு இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், பிரதமர் மோடியின் கனவு திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் என்பதை நிறைவேற்றுவதற்காக அதிக அளவு முதலீடுகளை எதிர்பார்க்கும் நோக்கில் தொழில் அதிபர்களுக்கு சலுகை வழங்குவதாகவும், ஏழை தொழிலாளிகளை பாதிக்கும் வகையிலும் இருப்பதாகவும் எதிக் கட்சிகள் கூறி, அவசர சட்டத்தை எதிர்க்கின்றன.