Wednesday 26 March 2014

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் 2



9.பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.

10.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990 இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
    

1. சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. 2. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை. 3. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை. 4. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், சென்னை. 5. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சென்னை. 6. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சென்னை. 7. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். 8. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை. 9. பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர். 10. பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி. 11. அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், கொடைக்கானல். 12. அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி. 13. பெரியார் பல்கலைக் கழகம், சேலம். 14. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி. 15. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை. 16. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 17. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர். 18. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம். 19. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ வித்யாலயா, காஞ்சிபுரம். 20. புதுவை மத்தியப் பல்கலைக் கழகம், புதுச்சேரி.

தமிழ்நாட்டின் பல்கலைகழகங்கள் 1

  1. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1984 ஏப்ரலில் உருவானது. தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 1990 இல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இதன் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ளன.
  2. அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. டாக்டர் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.
  3. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது
  4. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.
  5. சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக் கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.
  6. பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.


    7.பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006 - 07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலையின் மைய வளாகம முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.
    இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "A" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
    8.மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாடில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப் பல்கலைக் கழகமானது 109 இணைக்கப் பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் கல்யாணி மதிவாணன் உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துனணைவேந்தர் ஆவார். பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்றுள்ளது.
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரை பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978இல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.