
Monday, 31 March 2014
VAO தேர்வு –மாதிரிகணக்குகள்
1. 3 ¼ + 5 ½ + 7 ¾ + ……………. + 23 உறுப்புகள் வரை கூடுதல் = 644
2. 4 + 9 + 14 + ……………….. + 199 வரை கூடுதல் = 4060
3. 3,7,11, ………….. என்ற கூட்டுதொடரில் முதல் சில உறுப்புகளின் கூடுதல் 1275
பெறுவதற்கு எத்தனை உறுப்புகள் தேவை ?= 25
4. 3+11+19+……….. + 787 ன் கூடுதல் = 39105
5. 2,4,8, …………… என்ற பெருக்குதொடரில் 8 உறுப்புகளின் கூடுதல் = 510
6. 54,18,6,2…………… என்ற முடிவிலி தொடரின் கூடுதல் = 81
7. 5+25+125+…………….. 82 உறுப்புகள் வரை கூடுதல் = 488280
8. 1^2+2^2 + ………………… + 20^2 = 2870
9. 1^3+2^3+ …………….. + 20^3 = 44100
10. 1+2+……… + 70 = ? = 2485
11. ராமன், கண்ணன்இவர்களின் வயதுகள் முறையே 18,24 எனில் அவர்களின்வயது விகிதம் என்ன ? = 3:4
12. A : B = 4:3 B : C = 5:2 எனில் A : B : C = 20 : 15 : 6
13. 6 ஆண்கள் 15 நாட்களில் முடிப்பார் ,9 ஆண்கள் எத்தனை நாள்களில் முடிப்பர் = 10
14. ரூ.600ஐ 3:5:7 என்ற விகிதத்தில் பிரி = 120,200, 280
15. 25 : x = x : 9 எனில் x = ? = 15
16. Aயின் வருமானம் B யின் வருமானத்தை விட 20% அதிகம் .B யின்
வாருமானம் A யின் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு ?- 16 2/3 %
17. 30 % of 80 / x = 24 எனில் x = ? = X = 1
18. 35மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது 15 ஆண்டுகள். இவர்களுடன் ஆசிரியரை சேர்த்ததால் வயது 1 கூடுகிறது .
எனில் ஆசிரியரின் வயது . = 51
20. ஒரு சதுரத்தின் பக்க அளவு 50% அதிகரித்தால் , அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும் = 125 %
Friday, 28 March 2014
2013 நிகழ்வுகள்
2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.
உங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.
குறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம்.
ஜனவரி 17, 2013 : உலகின் மிகவும் மதிக்கத்தக்க, மிகப்புகழ்பெற்ற சைக்கிள் வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங், தான் ஊக்கமருந்து பாவித்து வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அதுவரை பெற்ற அனைத்து பதக்கங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.
பதிவு : ஊக்க மருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்!
ஜனவரி 24, 2013 : யுத்த களத்தில் பெண் இராணுவ வீராங்கணைகள் போர் புரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியது
ஜனவரி 27, 2013 : பிரேசிலின் நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டனர்.
பதிவு : பிரேசில் இரவு கேளிக்கை விடுதியில் தீ : 245 பேர் பலி
பெப்ரவரி 11, 2013 : அப்போது பாப்பரசராக இருந்த 7வது பெனடிக்ட் தான் திடீரென ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். (வத்திகான் வரலாற்றில் 600 வருடங்களில், இப்படி தானே முன்வந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த தைரியமான முதல் பாப்பரசர் இவர்)
பதிவு : பாப்பரசர் 16 வது பெனடிக்ட் பதவி விலக போவதாக திடீர் அறிவிப்பு
பெப்ரவரி 14, 2013 : உலகின் செயற்கை கால்களுடன் ஓடும் அதிவேக மின்னர் ஓட்ட வீரர் எனப் போற்றப்படும் ஒஸ்கார் பிஸ்டாரியஸ், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
பதிவு : 'பிளேட் ரன்னர்' ஆஸ்கார் பிஸ்டோரியஸ் காதலியை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் கைது
பெப்ரவரி 15, 2013 : பூமியில் மிக வேகமாக வந்து வீழ்ந்தது எரிநட்சத்திரம் : ரஷ்யாவிலிருந்த பலரால் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
பதிவு : அதெப்படிங்க : ரஷ்யாவில் எரிநட்சத்திரம் வீழந்ததை அவ்வளவு தெளிவாக படம்புடிச்சாங்க?
மார்ச் 13, 2013 : உலகின் புதிய பாப்பரசராக பிரான்ஸிஸ் தெரிவானார்
பதிவு : வத்திக்கானில் வெண்ணிறப் புகை - புதிய பாப்பரசராக தெரிவானார் ஆர்ஜெண்டீனாவின் கார்டினல்
ஏப்ரல் 15, 2013 : அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நாள் இதில் 3 பேர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் போயினர்.
பதிவு : உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா
ஏப்ரல் 16, 2013 : இக்குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் ட்சார்னேவ் சகோதரர்கள் என அவர்களுடைய புகைப்படங்களுடன் அடையாளம் காணப்பட்டனர். தாமெர்லான் ட்சார்னேவ் எனும் மூத்த சகோதரர் கொல்லப்பட்டார். இளையவரான ட்ஷோகார் சுற்றுவளைப்பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தான் குற்றமற்றவர் என அவர் தொடர்ந்து வாதிட்டார்.
ஏப்ரல் 24, 2013 : பங்களாதேஷில் 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர்.
பதிவு : வங்கதேச கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு
மே 06, 2013 : நான்கு தசாப்த காலத்தின் பின்னர் அமெண்டா எனும் பெண்மணி தான் கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவரைப் போன்று பல பெண்களை கடத்தி சீரழித்த குற்றச்சாட்டில் அரியெல் கஸ்ட்ரோ எனும் நபருக்கு 1,000 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மே 20, 2013 : அமெரிக்காவின் மூரில் டார்னார்டோ புயலால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 9, 2013 : அமெரிக்காவின் புலனாய்வுத் துறை, பலரது ரகசிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது எனும் அதிர்ச்சி தகவல்களை முதன்முறையாக உலகுக்கு வெளியிடப்பட்டவர் நான் தான் என எட்வார்ட் ஸ்னோவ்டன் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது.
பதிவு : ஸ்னோவ்டெனுக்கு சீனா, ரஷ்யா அடைக்கலம் கொடுத்திருப்பதற்கு அமெரிக்கா கடும் அதிருப்தி
ஜூன் 14 - 19, 2013 : இந்தியாவின் வட மாநிலங்களில் (உத்தரபிரதேசம்) பெய்த கடும் மழை மற்றும் அதனால் வேற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 6,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்
பதிவு : உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தோர் தொகை 500 ஐ கடந்தது
ஜூலை 03, 2013 : எகிப்து நாட்டின் அதிபர் மோர்ஸி, இராணுவ புரட்சி மூலம் திடீரென பதவியிறக்கப்பட்டார்.
பதிவு : எகிப்து அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு நாடுகள்
ஜூலை 13, 2013 : அமெரிக்காவின் கறுப்பினத்தவரான எனும் நபரின் படுகொலையில் ஜோர்ச் சிம்மெர்மேன் எனும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது
பதிவு : அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிராக அரங்கேறிய இன்னொரு சம்பவம்?:பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்
ஜூலை 22, 2013 : இங்கிலாந்தின் வருங்கால இளவரசரும், இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியினரின் புதல்வருமான ஜோர்ஜ் பிறந்த தினம்
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்
ஆகஸ்டு 21, 2013 : அமெரிக்கா இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல் குற்றங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்
ஆகஸ்டு 21, 2013 : சிரிய போரின் போது இடம்பெற்ற நச்சுவாயுத்தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இத்தாக்குதல் தம்மால் நிகழ்த்தப்படவில்லை என சிரிய அதிபர் அசாத்தின் படைகள் மறுப்பு தெரிவித்தன.
பதிவு : சிரியா மீது போர் தொடுக்க மேற்குலக நாடுகள் திட்டம்:ஈரான் கண்டனம்
செப்டெம்பர் 13, 2013 : இந்தியாவை அதிரச்செய்த டெல்லி மருத்துக் கல்லூரி மாணவியின் பேருந்து பாலியல் பலாத்காரம் தொடர்பிலான குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்திற்கும் ஒரு தடவை ஒரு பெண் பாலியல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார், அல்லது ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்.
பதிவு : டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்
செப்டெம்பர் 16, 2013 : அமெரிக்க வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி
செப்டெம்பர் 21, 2013 : கென்யாவின் வர்த்தக மையத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி
அக்டோபர் 4, 2013 : இந்தியாவின் ஆந்திர பிரதேஷ், ஒடிசாவில் ஏற்பட்ட மிகப்பயங்கரமான பைலின் புயலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 1999ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட புயலின் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பாரிய புயலாக உருவான போதும், முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பத்திரமாக இடம்பெயரச் செய்யப்பட்டதால் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது.
பதிவு : துவம்சம் செய்தது பைலின் புயல் : இருளில் மூழ்கியது ஒடிசா
அக்டோபர் 17, 2013 : அமெரிக்க அரச அதிகாரிகளின் 16 நாள் திடீர் வேலைப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததுடன், அமெரிக்க அரசு மறுபடி இயங்கத் தொடங்கியது
பதிவு : அமெரிக்க அரசு துறை முடக்கம் : மலேசியா, பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தார் ஒபாமா!
நவம்பர் 5, 2013 : செவ்வாய்க்கிரகத்தை நோக்கி இந்தியா அனுப்பிய மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட நாள். ரூ.450 கோடி செலவில், இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய இத்திட்டத்தின் படி செவ்வாய்க்கு செலுத்தப்பட்ட விண்கலம், 9 மாத பயணத்தின் பின்னர், செப்டெப்ம்பர் 24, 2014 இல் செவ்வாய்க் கிரகத்தை சென்றடையவுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தால் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பவற்றை அடுத்து செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நான்காவது விண்வெளி நிலையமாக இந்தியாவின் இஸ்ரோ புதிய சாதனை படைக்கும். இப்போதே குறித்த விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு உலகளவில் கடும் விமர்சனமும் எழுந்திருந்தது.
வெறுமனே பணத்தை வீணடிக்கும் முயற்சி இது. இத்திட்டத்திற்கு செலவழித்த பணப் பெறுமதியை இஸ்ரோ தனது, தொலைத்தொடர்பாடல், ஒளிபரப்பு, காலநிலை முன்னறிவிப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான எச்சரிக்கை, கடல் கண்காண்பிப்பு எச்சரிக்கை, கல்வி, பாதை வடிவமைப்பு போன்ற செய்மதிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றன அந்த விமர்சனங்கள். காரணம், இஸ்ரோவின் வருடாந்திர பட்ஜெட் ஒரு பில்லியன் டாலர், ஆனால் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் 17.7 பில்லியன் டாலர்களாக இருப்பதுடன், ரஷ்ய ஏஜென்ஸியின் பட்ஜெட் 7.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
பதிவு : செவ்வாயை நோக்கி மங்கல்யான் சற்று முன்னர் வெற்றிகரமாக தமது பயணத்தை தொடங்கியது!
நவம்பர் 8, 2013 : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ஹையான் தைபூனில் 6,000 பே கொல்லப்பட்டனர்.
பதிவு : பிலிப்பைன்ஸ் ஹையான் புயல் : 10 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் பலி?
நவம்பர் 23, 2013 : 1979ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே முதன்முறையாக அணு ஒப்பந்தம் ஒன்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் கையெழுத்தானது.
டிசம்பர் 05, 2013 : 20ம் நூற்றாண்டின் Living Legend என அழைக்கப்பட்ட மாபெரும் கறுப்பினத் தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார்.
பதிவு : அமைதிப் புரட்சியின் அடலேறே சென்று வா!
டிசம்பர் 8, 2013 : டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் கடும் பின்னடவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைநகர் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறா
Wednesday, 26 March 2014
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் 2

9.பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.
10.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990 இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
1. சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
2. அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.
3. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.
4. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம், சென்னை.
5. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், சென்னை.
6. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், சென்னை.
7. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
8. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை.
9. பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
10. பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி.
11. அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம், கொடைக்கானல்.
12. அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.
13. பெரியார் பல்கலைக் கழகம், சேலம்.
14. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.
15. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோவை.
16. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
17. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
18. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்.
19. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ வித்யாலயா, காஞ்சிபுரம்.
20. புதுவை மத்தியப் பல்கலைக் கழகம், புதுச்சேரி.
தமிழ்நாட்டின் பல்கலைகழகங்கள் 1
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1984 ஏப்ரலில் உருவானது. தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 1990 இல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இதன் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ளன.
- அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. டாக்டர் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.
- அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.
- சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக் கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.
- பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.
7.பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006 - 07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலையின் மைய வளாகம முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.
இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "A" கிரேடு வழங்கப்பட்டுள்ளது. 8.மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாடில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப் பல்கலைக் கழகமானது 109 இணைக்கப் பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் கல்யாணி மதிவாணன் உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துனணைவேந்தர் ஆவார். பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்றுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரை பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978இல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.
Monday, 24 March 2014
Subscribe to:
Posts (Atom)

