Tuesday 1 April 2014

உணவே மருந்து ?(நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான வினா விடைகள்)

  1. மனிதனின்  அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது எது ?  
  2. "பசிப்பிணி ' எனும் பாவி எனப் பசியின் கொடுமையைக் கூறும் காப்பியம் எது?
  3.  குளிர்ச்சியை உண்டாக்கி ரத்தத்தை தூய்மை படுத்துவது ?
  4. வெப்ப நாடான நமக்கு ஏற்ற அரிசி எது ?
  5. " உண்டிகொடுத்தோர்  உயிர்கொடுத்தோரே" எனப்பாடும் நூல் ?
  6. மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது ?
  7. நெஞ்சில் உண்டாகும் சளியை நீக்க வல்லது எது ?
  8. திருக்குறளில் உணவுப்பழக்கம் பற்றிப்பேசும் அதிகாரம் எது?
  9. பசிப்பிணிக்கு உணவே 
  10. நோய்க்கு முதல் காரணம் 
  11. கொழுப்பு நிறைந்த பொருள் 
  12.  உப்பு நிறைந்த உணவு எது ?
  13. எவ்வுனவை தவிர்க்க வேண்டும் ?
  14. 'மீதூண் விரும்பேல் 'எனக்கூரியவர் யார் ?
  15. எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் தன்மையுடையன எது ?
  16. துளசியின் மருதுவப்பயன் யாது ?
  17. மஞ்சட்காமாலை க்குப் எளிய மருந்தாகப்பயன்படும் மூலிகை எது ?
  18. முடி வளர உதவும் மூலிகை எது ?
  19. ' குமரி '  எனப் பெயரிட்டு அழைக்கப்படும் மூலிகை எது ?
  20. ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றும்  மூலிகை எது ?
  21. கையாந்தகரை என்ற பெயரால் அழைக்கப்படும் மூலிகை எது ?
  22. சொறி சிரங்கு நீக்கவல்ல மூலிகை எது ?
  23. முருங்கை கீரையில் உள்ள சத்து ?
  24. பெண்களின் கருப்பை சார்ந்த நோயை நீக்கவல்ல மூலிகை  எது ?
  25. இளைப்பு , இருமல் போக்கும மூலிகை எது ?
  26.  பாம்பின் விஷ முறிவுக்கு உதவும் மருந்து எது ?


    விடைகள் :
    1.       உணவு
    2.       மணிமேகலை
    3.       வெங்காயம்
    4.       புழுங்கலரிசி  
    5.       புறநானூறு
    6.       கறிவேப்பிலை
    7.       மஞ்சள்
    8.       மருந்து
    9.       மருந்து
    10.   உணவு
    11.   ,தயிர் , நெய் , பனிக்கூழ்
    12.   அப்பளம்
    13.   கார உணவு , பொறித்த உணவு , புளிப்பு உணவு
    14.   ஒளவையார்
    15.   மூலிகைகள்
    16.   மார்புச்சளி நீக்கம்
    17.   கீழாநெல்லி
    18.   கற்றாழை
    19.   கற்றாழை
    20.   தூதுவளை
    21.   கரிசலாங்கண்ணி
    22.   குப்பைமேனி
    23.   இரும்புச்சத்து
    24.   கற்றாழை
    25.   தூதுவளை
    26. வாழைத்தண்டின்  சாறு 


No comments:

Post a Comment